Wednesday 31 October 2012

பித்தா பிறை சூடி


சிவாய நம

                       
பித்தா பிறை சூடி

தோடு ,கூற்று,பித்தா, இம்மூன்றும் பீடுடைய தேசிகன் பேரருளாமே"எந்த ஒரு பாடலைப் பாடுவதற்கும்,அல்லது எந்த ஒரு நற் காரியத்தைத் தொடங்குவதற்கும் முன்னரே இம் மூன்றுப் பதிகப் படல்களில் ஒன்றைப் பாடி அதன்பின் அச்செயலைத் தொடர்ந்தால் அப்பாடலே நற்குருவாய் நின்று அருள் பாலிக்கும் என்பதே திருவாக்கு இம்மூன்றுமே தேவாரம் பாடிய மூவர் முதலிகளின் முதல் வாக்கு.ஞானசம்பந்தப்பெருமானின் முதல் வாக்கு தோடு. நாவுக்கரசரின்  தெய்வீகத்தொடக்கமே கூற்று. பித்தா என்பது சுந்தரத்தமிழின் மந்திரத்தொடக்கம்.
                       
இம்மூன்றிலுமே பித்தா என்றத் தொடக்கத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு..பயத்திலோ பசியிலோ பாடிய முதல்வாக்கு தோடு .நோயிலோ அதன் வலியிலோ பாடிய முதல் வாக்கு கூற்று.ஆனால் சுந்தரரிடம் இறைவன் கேட்டு வாங்கிய முதல்நற்றமிழ்
 சொல் பித்தா என்பதாகும்

                   தடுத்தாட்கொண்ட புராணத்தில் தம்மை ஆட்கொள்ளவேண்டி வெண்ணெய்நல்லூருக்கு அழைத்து வந்து ,கோயிலுக்குள் மறைந்து பின் தம் கோலம் காட்டி நின்ற கோமானின்  அருளை எண்ணி உருகி நின்ற வேளையில்" எமக்கு அருச்சனை பாட்டேயாகும் ஆகவே சொற்றமிழால் எமைப் பாடுக"என்று இறைவன் கேட்க, ஆவல் கொண்ட நாவலூராரும் எவ்விதம் பாடலைத்தொடங்க என்றுத் திகைத்து நின்றார்.இறைவனாரே "மணப்பந்தலில் என்னைப் :"பித்தனோ மறையோன்" என்று வாது மொழிந்தமையால் பித்தா என்றேத் தொடங்குக எனப் பணித்தார்.

         நாவலூராரும் பித்தா பிறைசூடி எனத்தொடங்கி இவ்வுலகம் முழுமையும் உய்வைப் பெறச்செய்யும் அற்புதப் பதிகத்தைப்பாடினார்ஆலமுண்ட கண்டனின் அருள் வாக்கினையேற்று அணுக்கத்தொண்டர் ஆலாலசுந்தரர் பாடிய பாட்டல்லவா.இதன் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ.இப்படலில் எப்போதும் இறைவனின் நினைவையுடையவனே மனிதன்;இறை எண்ணம் இல்லா மனம் கொண்டவன் பேய் என்று மிக அழகாகப் பக்தி சிந்தனையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்."நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை பேயாய்த் திரிந்தெய்த்தேன்"என்கிறார்.

   பித்தாபிறைசூடி என்றச் சொற்றொடருக்கேத் தனி மகத்துவம் உண்டு,முதல் திருமுறையிலேயே ஞானசம்பந்தப் பெருமான் எருக்கத்தம் புலியூரின் சிறப்பைப் பாடும் போது
                              விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
                              பெண்ஆண்அலிஆகும் பித்தாபிறைசூடி
என்று இந்த அற்புதப் பதத்தைப் பயன் படுத்துகிறாரென்றால் இதை ஒரு அற்புத மந்திரச் சொல்லாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்இறைவனையே இன்னும் வேண்டும் என்று கேட்கவைத்த அற்புதப் பதிகமிது.ஓதுவார்க்கும் காதில் கேட்ப்பார்க்கும் நலமே விளையும்.
                            
திருச்சிற்றம்பலம்
                                       

சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
          கன்னியாகுமாரி   மாவட்டம். 

திருப்பெருந்துறை


சிவாய நம

திருப்பெருந்துறை

            "சேற்றிதழ் கமலங்கள் மலருந்தண் வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே " இந்த திருவாசகத் தேன் கடலில்  பயணிப்பவர்களுக்கு வழியெல்லாம் திருப்பெருந்துறையே வருவதும் போவதுமாய்த்  தெரியும் . வாதவூரரை மாணிக்கவாசகராக்கிய  ஆதித்திருத்தலமிது. இத்தலம் எங்கே யிருக்கிறது தெரியுமா ? இத்தலம் மணிவாசகப்பெருமானின் சிந்தையில் இருக்கிறது.
        ஆம்     "சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையையே  ஊராகக்கொண்டான் உவந்து" என்கிறார் மணிவாசகர்.
            அன்பர்களே !! தமிழகத்தில் உள்ள அறந்தாங்கியிலிருந்து  ஒரு இருபது கி.மீ. தூரத்திலுள்ளது இத்தலம். இதன் இக்காலப்பெயர் ஆவுடையார் கோவில் என்பதாகும். கோவில் பதிவுகளில் இதன் பெயர் ஆளுடையார் கோவில் என்றுள்ளது. எனவேதான் மணிவாசகப்பெருமான் ஆளுடைஅடிகள் என்று  போற்றப்படுகிறார். இத்தலத்தில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உருவாக்கி வைத்தமையால் இது திருப்பெருந்துறையாயிற்று.
            சீர்காழிக்கு பல பெயர்கள் உண்டு என்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள், ஆனால் திருப்பெருந்துறைக்கும் பல பெயர்கள் உண்டு என்பதை அறிவீர்களா ? இத்திருதலத்திற்கு ஆதிகைலாயம், மகா கைலாயம், துவாதசாந்தம், சதுர்வேதபுரம், சிவயோகவனம், ஞானபுரம் , சிவபுரம்  என இன்னும் எத்தனையோத் திருப்பெயர்கள் உண்டு .
        இத்திருத்தலத்தில் இறைவன் குருந்தமரமாக நின்று அருள் பாலிக்கிறார். இறைவன்,  பார்வதி தேவியிடம் தாம் நிர்குணனாகவும் சர்குணனாகவும் நிற்கும் நிலையை விளக்குகிறார். அப்போது தாம் நிற்குண ஜோதியாய் எங்கும் மற்றும் தம்முள்ளும் நிற்கும் அந்த ஆத்மநாதனையே த்யானித்துவருகிறேன். நாமிருக்குமிடம் கைலாயம் ஆத்மநாதர் இருக்குமிடம் மகா கைலாயம் என்கிறார் .
             இதனையே மணிவாசகப்பெருமான் "பரமானந்ததப் பழங்கடல் அதுவே கருமாமுகில் தோன்றி                              திருவார்ப் பெருந்துறை வரையில் ஏறி" என்கிறார். மலையே இல்லாதத் திருப்பெருந்துறையில் ஆத்மநாதர் கைலையிலும் சிறந்ததோர் ஆத்ம மலையிலிருக்கிறார் என்று பொருள்படக் கூறுகிரார்.
            வள்லல் பெருமானும் இத்திருதலத்தைக் கைலாயம் என்றே பகர்கிறார். "அத்தலமதனில் வாழ்வார் அனைவரும் சிவமே" என்கிறது திருப்பெருந்துறைப் புராணம்.
 வாதவூராருக்குக் குருவாய் வந்து பாதம் காட்டி நின்ற ஏதமில் திருத்தலம் இதுவே.
                           நீதியே செல்வப்பெருந்துறையில்
                           நிறைமலர்க் குருந்தமே வியசீர்
                           ஆதியே அடியேன்  ஆதரித்தழைத்தால்
                           அதெந்துவே என்றருளாயே
இங்குள்ள ஸ்வாமி ஆத்மநாதர் ஆவார்.உருவமற்று அருவமாக விளங்குகிறார்.லிங்கமின்றி ஆவுடை மட்டுமுள்ளதால் இது ஆவுடையார் கோவிலாயிற்று.இக்கோயிலின் இறைவன் குருவாகக் கருதப்பட்டமையால் தென்முகக்கடவுளாகத் தெற்கு முக சன்னதியைக்    கொண்டிருக்கிறார்.   சுவாமி மட்டுமல்ல அம்பாளுக்கும் உருவம் கிடையாது. A®£õÐUS v¸¨£õu[PÒ ©mk÷© Esk. |¢v, £¼ ¥h® CÀ»õu ÷Põ°À இது.
தில்லையிலோ பஞ்சசபை .ஆயின் திருப்பெருந்துறையில் ஆறுசபை. கனகசபை, நடனசபை, தேவசபை, சத்சபை, சித்சபை, ஆநந்தசபை ஆகிய சபைகள் உள்ளன.
                           ஆவலோடுப் பெருந்துறையை
                       அகத்தில் நினைக்க, அதன் புகழை
                       நாவில் துதிக்க
                       பொன்னுலகர் போற்றப் புகுவாரே
 என்பது சுந்தரலிங்கமுனிவர் வாக்கு.

தல வணக்கத்தில் தலையாயத் திருத்தலமே திருப்பெருந்துறை !!
சிற்ப கலையின் சிரசாய் விளங்கும் திருத்தலமே திருப்பெருந்துறை !!
ஆதிகுருநாதர் ஆத்மநாதராய் விளங்கும் திருத்தலமே திருப்பெருந்துறை !!

                             குருவாய் அடியார் தமையாண்ட
                             குருந்தின் வடிவே துணை.
நன்றி .
                             திருச்சிற்றம்பலம்.

சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
கன்னியாகுமாரி   மாவட்டம்.